Read in English
This Article is From Nov 01, 2018

திறனறிவு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 96 வயது மூதாட்டிக்கு கேரள முதல்வர் பாராட்டு!

இவருக்கு வயது என்பது வெறும் எண்தான். திறனறிவு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூதாட்டி கேரள மாநில முதல்வரால் கௌரவிக்கபட்டார்.

Advertisement
தெற்கு
Thiruvananthapuram:

96 வயது நிரம்பிய கார்த்தியாயினி அம்மா, திறனறிவு தேர்வில் 98/100 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். "நான் படிக்கும் வரை, இது என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது".

மிகவும் வயது முதிர்ந்தவர், திறனறிவு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதோடு, சாதனையும் படைத்துள்ளார். "குழந்தைகள் படிப்பதை பார்க்கும்போது எனக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என்னைப் படிக்கச் சொல்லி கேட்டபோது, நானும் ஒப்புக்கொண்டேன். பத்தாம் வகுப்புக்கு இணையாகப் படிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால், நான் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன்" என்று என்.டி.டீ.வி-யிடம் கூறினார்.

அவருக்கு மிகப் பெரிய இன்னொரு கனவும் உள்ளது. "இதற்குப் பிறகு நான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு நேரம் கிடைக்கும்போது, அதில் வேலை செய்ய வேண்டும்" என்றார். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கார்த்தியாயினி அம்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு பட்டு புடவைகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

"நான் படிக்க வேண்டிய காலத்தில் படிக்கவில்லை. இப்போது படிப்பது எனக்கு பெருமையாக உள்ளது" என்று என்.டி.டீ.வி மற்றும் கேரள முதலமைச்சரிடம் தெரிவித்தார். அங்கிருந்தவர்களிடம் அவர், தனக்கு இந்த வயதிலும் உடல் சார்ந்த பிரச்னைகள் எதுவும் இல்லை எனவும், ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் கலந்த டீ குடிப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

திறனறிவு தேர்வில், எழுத்துதல், படித்தல் மற்றும் சில கணக்கும் அடங்கும். இந்த வருடம், ஏறதாழ 42,933 மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். 1991-ம் ஆண்டு கேரள மாநிலம் முழுமையாக படித்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் மாநிலமாக கேரளா அறியப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில், இன்னும் 18 லட்சம் பேர் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி "அக்‌ஷராலக்‌ஷம்" என்ற நிகழ்ச்சியை மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பழங்குடியினர், மீனவர்கள் மற்றும் குடிசைவாழ் மக்கள் என அனைவரிடமும் கல்வியறிவின்மையை அகற்றுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

Advertisement