Zuckerberg has apologized multiple times in the past over privacy breach (Reuters)
ஹைலைட்ஸ்
- ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் தகவலை விற்றது பரபரப்பானது
- பலவருடமாக வெவ்வேறு தவறுகளுக்காக மார்க் மன்னிப்பு கேட்டுவருகிறார்
- மார்க்கின் இந்த செயல் தொடர்கதையாகிவிட்டது
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர் குறித்த தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்திடம் விற்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. இதுகுறித்து வெளியில் தெரிந்தவுடன் பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்புக் கேட்டார்.
வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் ஃபேஸ்புக் தவறு செய்வதும், பின் அதற்கு மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது.
இதற்கு முன் மார்க் ஜூக்கர்பெர்க் அளித்த மன்னிப்பு கடிதங்களின் தொகுப்பு இதோ:
நவம்பர் 2006:ஃபேஸ்புக் தனது பயனர்களுக்கு அவர்களது நண்பர்களுடைய போஸ்ட்களை திரட்டி ‘நியூஸ் ஃபீட்’ என்று மொத்தமாக கொடுத்தது. ஆனால் இதில் இருந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக அடுத்தவர் தகவலை எளிதாக திருட முடியும். இதனால் வாடிக்கையாளர்களிடம் பலத்த எதிர்ப்பை சம்பாதித்து முதன்முறையாக மார்க் மன்னிப்புக் கோரினார்.
நவம்பர் 2007:அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே ‘பீக்கன்’ என்ற வசதிக்காக ஃபேஸ்புக் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் மக்களிடையே எதிர்ப்புக்குரல் எழும்பியதால் மார்க் அடுத்த மன்னிப்புக் கோரினார்.
பிப்ரவி 2009:ஃபேஸ்புக் அதன் சேவை விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தது. ஆனால், இதிலும் தங்களது தரவுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று பயனர்களுக்கு சந்தேகத்தை அளித்தது. இதனால் மன்னிப்புக் கோரினார் மார்க் ஜூக்கர்பெர்க்.
ஏப்ரல் 2010:விளம்பர நிறுவனங்கள் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் ஐடியை பயன்படுத்திக் கொள்ள ஃபேஸ்புக் வழிவகுத்தது. இதன்மூலம் விளம்பர நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதுகுறித்து தெரிந்தவுடன் உலகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புக் குரல் எழுந்ததையடுத்து மன்னிப்புக் கேட்டார் மார்க்.
நவம்பர் 2011:பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பு விஷயத்தில் நடந்த முறைகேடுகள், தவறுகள் குறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மார்க் ஜூக்கர்பெர்க மன்னிப்புக் கேட்டார். அமெரிக்க அரசாங்கம் கூகுள் மற்றும் ட்விட்டர் ஆகிய முன்னணி நிறுவனங்களோடு வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பேஸ்புக் கையெழுத்திட்டது.
இது கையெழுத்தாகி 7 வருடம் ஆனதால் இந்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டாரோ என்னவோ, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் பேரம் பேசியுள்ளார் மார்க்.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)