தமிழக காங்கிரஸ் தலைவராக 3 ஆண்டுகளாக இருந்த வந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,
தலைமைப் பொறுப்பு மாற்றப்பட்டதற்கு காரணங்கள் எதுவுமில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதும், தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
என்னை காங்கிரஸ் தலைவராக நியமித்தது ராகுல்காந்திதான். என்னை மாற்றுவதற்கான முழு உரிமை ராகுல்காந்திக்கு உள்ளது. என்னை மாற்றுவதற்கு முன்பே என்னிடம் தகவல் கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும்போது எப்படி செயல்பட்டனோ அதை விட தற்போது இன்னும் வேகமாக செயல்படுவேன். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும்.