This Article is From Nov 22, 2019

ஆண்கள் அழுவது அவமானமல்ல - சச்சின் டெண்டுல்கரின் மனம் நெகிழ வைக்கும் பதிவு

கண்ணீர் சிந்துவது அவமானத்துக்குரியது அல்ல. என்று கூறியுள்ளார். ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென சொல்லப்பட்டு வந்தவற்றை அச்சமில்லாமல் கடந்து வாருங்கள் என்று தன் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் அழுவது அவமானமல்ல - சச்சின் டெண்டுல்கரின் மனம் நெகிழ வைக்கும் பதிவு

சச்சின் டெண்டுல்கர் இண்ஸ்டாகிராம் புகைப்படம்

ஆண்கள் அழுவதை அவமானகரமாக நினைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சர்வதேச ஆண்கள் வாரம் கடைப்பிடிக்கப்படு வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் சக ஆண்களுக்காக உருக்கமான பதிவினை எழுதியுள்ளார்.  விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாக கூடும். அண்ணனாக தோழனாக வழிகாட்டியாக ஆசிரியராக இருப்பீர்கள். 

உறுதியும் வீரமும் உடையவராக இருப்பீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள் உடைந்து அழவேண்டும் எனத்தோன்றும் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விடலாம் என்று துடிப்பீர்கள். ஆனால் கண்டிப்பாக கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு உறுதி மிக்கவராக நடிப்பீர்கள். ஆண்மகன் அழக்கூடாது என்று சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். நானும் இதை உளமார நம்பி வளர்ந்தேன். அத்தகைய நம்பிக்கை தவறென நான் உணர்ந்து கொண்டதாலே இம் மடலை எழுதுகிறேன். 

16/11/2013 நான் ஆடுகளத்தில் நின்ற அந்நாளை இன்னமும் மறக்கவில்லை. அது குறித்து நீண்டகாலமாக யோசித்துக் கொண்டிருந்தேன் என்றலௌம் எதுவும் பெவிலியன் நோக்கி கடைசியாக நடைபோடும் அக்கணத்திற்கு என்னை எதுவும் தயார்படுத்தவில்லை. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போது நான் மூழ்கிக் கொண்டிருந்தேன். 

தொண்டையை  அடைத்துக். கொண்டு வந்தது. எல்லாம் முடியப்போகிரறது எனும் அச்சவுணர்வு சூழ்ந்தது. மண்டையில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன. உலகத்தின் முன் உடைந்து அழுதேன். நான் அதைத்தடுக்க துளியும் போராடாவில்லை. ஆச்சரியப்படும் வகையில் ஒரு வகையான அமைதியை உணர்ந்தேன். அப்படி என்னை வெளிக்காட்டியதால் இன்னமும் வலிமை கூடியவனாக எனக்கு கிடைத்த வாய்ப்புக்கெல்லாம் நன்றியுடையவனாக உணர்ந்தேன். கண்ணீர் சிந்துவது அவமானத்துக்குரியது அல்ல. என்று கூறியுள்ளார். ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென சொல்லப்பட்டு வந்தவற்றை அச்சமில்லாமல் கடந்து வாருங்கள் என்று தன் பதிவில் தெரிவித்துள்ளார். 

Click for more trending news


.