This Article is From Feb 15, 2019

‘இன்னொரு மகனையும் தியாகம் செய்வேன்!’- புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தந்தை

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

‘இன்னொரு மகனையும் தியாகம் செய்வேன்!’- புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தந்தை

முன்னதாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

New Delhi:

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரரான தனது மகன் இறந்துள்ளதையும் பொருட்படுத்தாமல், ‘நாட்டுக்காக எனது இன்னொரு மகனையும் தியாகம் செய்வேன்' என்று உருக்கமாக கூறியுள்ளார் ஓர் தந்தை. 

கொல்லப்பட்ட 40 பேரில் சி.ஆர்.பி.எப் ராணுவ வீரரான ரத்தன் தாக்கூரும் ஒருவர். இறப்பு செய்தியை அறிந்த பிகாரில் உள்ள அவரது குடும்பம் கதறிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட துயர நேரத்திலும் தாக்கூரின் தந்தை, தீவிரவாதத்துக்கு தலை வணங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தாக்கூரின் தந்தை இந்த கொடூர சம்பவம் குறித்து பேசுகையில், ‘தாய் நாட்டின் சேவையில் ஈடுபட்டிருந்த போது எனது ஒரு மகன் உயிர் துறந்துள்ளான். எனது இன்னொரு மகனையும் இந்த நாட்டுக்காக தியாகம் செய்வேன். ஆனால், இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று உருக்கமாக கூறியுள்ளார். 

முன்னதாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் தீவிரவாதிகள் மிகப் பெரிய தவறு செய்துள்ளார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் நீதிக்கு முன்னர் நிறுத்தப்படுவர்' என்று சூளுரைத்தார். 

ராகுல் காந்தி இச்சம்பவம் குறித்து பேசுகையில், ‘இது மிகப் பெரிய துயர சம்பவம். நமது ராணுவ வீரர்களுக்கு எதிராக இப்படியொரு தாக்குல் நடந்திருப்பது கொடூரமானது. ராணுவ வீரர்களுடன் நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம். எந்த சக்தியாலும் இந்த தேசத்தை உடைக்க முடியாது. 

இந்த விவகாரத்தில் மத்திய அரசோடு நாங்கள் துணை நிற்போம். அதைத் தவிர இந்த விவகாரத்தில் பேச ஒன்றுமில்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 
 

.