This Article is From Aug 31, 2018

‘உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகுவோம்!’- ட்ரம்ப் அச்சுறுத்தல்

ப்ளூம்பெர்க் உடக நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் இந்த அதிர்ச்சியளிக்கும் கருத்தை தெரிவித்துள்ளார்

‘உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகுவோம்!’- ட்ரம்ப் அச்சுறுத்தல்
Washington:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகுவோம்’ என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

ப்ளூம்பெர்க் உடக நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் இந்த அதிர்ச்சியளிக்கும் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேட்டியின் போது, ‘உலக வர்த்தக அமைப்பு, தற்போது இருக்கும் நடைமுறைகளை சரி செய்து கொள்ளவில்லை என்றால் நாங்கள் விலகுவோம்’ என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியுள்ளார். 

‘உலக அளவில் அமெரிக்காவுக்கு வர்த்தக ரீதியில் சரியான அணுகுமுறை பின்பற்றப்படுவதில்லை. அதற்கு முக்கியமான காரணம் உலக வர்த்தக அமைப்புதான். அது சரியாகவில்லை என்றால் உலக வர்த்தக அமைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ட்ரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு வேளை அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகினால், அது உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.