This Article is From Jun 03, 2019

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!

இந்திய விமானப்படையை சேர்ந்த போக்குவரத்து விமானம், எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகளுடன் அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!

அன்டோனோவ் ஏ.என்- 32 ரக விமானம் 12.25 க்கு புறப்பட்டுள்ளது.

New Delhi:

இந்திய விமானப்படையை சேர்ந்த போக்குவரத்து விமானம் ஒன்று, 13 பேருடன் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகளுடன் , அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து  புறப்பட்டு சென்ற விமானம் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்டோனோவ் ஏ.என்- 32 ரக விமானம், அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து மதியம் 12.25க்கு புறப்பட்டுள்ளது. 

கடைசியாக 1 மணிக்கு ஒரு மணியளவில் அருணாசலபிரதேசம் மென் சுக்கா என்னும் இடத்தின் அருகில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அந்த விமானம், தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதாக தெரிகிறது. அதிலிருந்து, தற்போது வரை விமானம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பாதுகாப்புப்படை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சில மணி நேரங்களாக காணாமல் போன இந்திய விமானப்படை விமானம் குறித்து விமானப்படை துணைத்தலைவர், மார்ஷல் ராகேஷ் சிங்கிடம் பேசியுள்ளேன். 

அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக மீண்டு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.