हिंदी में पढ़ें Read in English
This Article is From Mar 05, 2019

''பாகிஸ்தானுக்கு சென்று கொல்லப்பட்ட தீவிரவாதிகளை எண்ணுங்கள்'' : காங்.க்கு ராஜ்நாத் பதில்

பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்கிற விவரத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டு வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

Dhubri (Assam):

பாகிஸ்தானுக்கு சென்று இந்திய விமானப்படை கொன்ற தீவிரவாதிகளை எண்ணி விட்டு வாருங்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டிற்கு சென்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

முதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாலகோட் தீவிரவாத முகாமில் 500-700 தீவிரவாதிகள் வரை பயிற்சி பெறலாம் என செய்திகள் வெளி வந்தன. சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறியிருந்தார். 

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையில் முரண்பாடு காணப்படுவதால், அதுகுறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். 

Advertisement

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நண்பர்கள், பாலகோட்டில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றனர். அப்படி அவர்கள் விரும்பினால் பாகிஸ்தானுக்கு அவர்கள் சென்று, அங்கு கொல்லப்பட்ட தீவிரவாதிகளை எண்ணிவிட்டு வரலாம். 

Advertisement

பாகிஸ்தான் அரசுக்கும், அந்நாட்டு தலைவர்களுக்கும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை துல்லியமாக தெரியும். காங்கிரஸ் தலைவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் விமானப்படை பாலகோட்டிற்கு சென்று, கொல்லப்பட்ட தீவிரவாதிகளை 1, 2, 3, 4,... என எண்ண வேண்டும் என நினைக்கிறார்களா?. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். 

Advertisement