বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 24, 2019

''பாலகோட் தீவிரவாத முகாமை துல்லியமாக தாக்கினோம்'' - விமானப்படை பைலட் சிறப்பு பேட்டி!!

புல்வாமாவில் துணை ராணுவத்தினர் 40 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து பாலகோட்டில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

Advertisement
இந்தியா Edited by

பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட பைலட் என்.டி.டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

Gwalior:

பாலகோட் தீவிரவாத முகாமை துல்லியமாக தாக்கினோம் என்று தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை பைலட்கள் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஒட்டுமொத்த தாக்குதலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முடிவடைந்தது. தீவிரவாத முகாமை நாங்கள் மிகத் துல்லியமாக தாக்கினோம். இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் பயன்படுத்திய போர் விமானம் பாலகோட் தீவிரவாத முகாமில் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. 
 


நாங்கள் இரண்டரை மணி நேர தாக்குதலில் ஈடுபட்டோம். ஆனால் அந்த நேரம் கடந்து சென்றதே எங்களுக்கு தெரியவில்லை. மின்னலைப்போல அந்த நேரம் சென்ற விட்டது. 

எல்லைக் கோட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்தினோம். இருப்பினும் பாகிஸ்தான் ரேடாரில் நாங்கள் சிக்கவில்லை. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் வீர மரணம் அடைந்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ராணுவம் தீர்மானித்திருந்தது. 

இதையடுத்து கடந்த பிப்ரவரி 26-ம்தேதி 12 மிராஜ் ரக விமானங்கள் பாலகோட்டிற்குள் சென்று தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். 

Advertisement
Advertisement