Abhinandan Selfie: இந்த புகைப்படங்கள் சந்திக்க முடியாத உங்கள் குடும்பத்தினருக்காக என்று அபிநந்தன் கூறியுள்ளார்.
New Delhi: பாகிஸ்தான் வசம் சிக்கி மீண்டு வந்த, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன்(Abhinandan Varthaman), பணியில் சேர்ந்துள்ள நிலையில், அவருடன் சக வீரர்கள் செல்பி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது.
அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மீண்டும் பணியில் இணைந்த அபிநந்தனுக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து வெளியான வீடியோவில், பணியில் மீண்டும் இணைந்த பின், ஜம்மு-காஷ்மீரில் தனது சக வீரர்களை சந்திக்கும் போது அவர்கள் அனைவரும் அபிந்தனுடன் செல்பி எடுக்கின்றனர். கடைசி என்ற படியே கூறிக்கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்பி எடுக்கின்றனர்.
இதுகுறித்து அபிநந்தன்(Abhinandan Varthaman) கூறும்போது, நான் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது அவர்களுக்காக அல்ல, என்னால் சந்திக்க முடியாத அவர்களது குடும்பத்திற்காக என்று அவர் கூறினார். மேலும், அவர்கள் அனைவரின் குடும்பமும் எனது உடல்நலனுடன் இருக்க வேண்டிக்கொண்டவர்கள் அவர்களுக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லியாக வேண்டும் என்று அவர் கூறினார்.