Read in English
This Article is From Mar 06, 2019

''அபிநந்தனுக்கு சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் இல்லை'' - விமானப்படை தகவல்

போலி அக்கவுன்ட் எதையும் ஃபாலோவ் செய்ய வேண்டாம் என்று சமூக வலைதள பயன்பாட்டாளர்களை விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

பாகிஸ்தான் படைகளால் பிடிபட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் அபிநந்தன் பிரபலம் அடைந்துள்ளார்.

New Delhi:

அபிநந்தனுக்கு சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஏதும் இல்லை என்றும், அவரது பெயரில் செயல்படும் போலி அக்கவுன்ட்கள் எதையும் ஃபாலோ செய்ய வேண்டாம் எனவும் விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. 

பாகிஸ்தான் படைகளால் பிடிபட்ட பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் நாடு முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார். அவரது அருவா மீசையை பல இளைஞர்கள் விருப்பத்துடன் வைத்து வருகின்றனர். இதற்கிடையே அவரது பெயரில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளி வந்தன.

அவை அனைத்தும் போலி அக்கவுன்ட்டுகள் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், @IAFAbhinandanV, @abhinandanhere, @_pilotiaf, @WC_Abhinandan, @AbhiNandan_Wcdr, @W_abhinandan ஆகிய ட்விட்டர் அக்கவுன்ட்கள் அபிநந்தன் பெயரில் போலியாக செயல்பட்டு வந்ததாகவும், இவை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

இதேபோன்று பேஸ்புக்கிலும் சில அக்கவுன்ட்கள் அபிநந்தன் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டுள்ளன. அவருக்கு சமூக வலைதளங்களில் எந்த அக்கவுன்ட்டும் கிடையாது என்றும் யாரும் அவரது பெயரில் செயல்படும் ப்ரோஃபைலை ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. 

Advertisement