ஐ.பி. மற்றும் ரா உளவுப்பிரிவின் தலைவர்கள் இருவரும் 1984-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.பிரிவை சேர்ந்தவர்கள்.
New Delhi: மத்திய உளவுத்துறை மற்றும் ரா உளவு அமைப்பின் தலைவர்களாக 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் ஐ.பி. எனப்படும் உளவுத்துறை உளவு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
வெளி நாடுகளில் இந்தியாவின் நலனுக்காக ரா எனும் உளவு அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவர்களாக 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.யின் தலைவராக அரவிந்த் குமாரும், ரா உளவு அமைப்பின் தலைவராக சாமந்த் கோயலும் பொறுப்பேற்க உள்ளனர்.
இருவரும் 1984-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆவர். அரவிந்த் குமார் அசாம் - மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அதிகாரி ஆவார். முன்னதாக அவர் பீகார் மாநில உளவுத்துறை தலைவராக பதவியில் இருந்தார். தற்போது காஷ்மீர் உளவுத்துறை தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
ரா உளவு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் சாமந்த் கோயல் 1984-ம் ஆண்டின் பஞ்சாப் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அவர், துபாய் மற்றும் இங்கிலாந்து இந்திய தூதரகங்களில் பொறுப்பில் இருந்தவர்.
பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலுக்கு சாமந்த் கோயல் மூளையாக செயல்பட்டார். கடந்த 1990-களில் பஞ்சாப் தீவிரவாத பிரச்னைகளை கையாண்ட அனுபவம் கோயலுக்கு உண்டு.