This Article is From Oct 09, 2019

IBPS Clerk 2019: வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

IBPS Clerk 2019: கிளார்க் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இன்றுடன் முடிவடைகிறது.

IBPS Clerk 2019: வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

IBPS Clerk 2019: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

New Delhi:

வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என வங்கி பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த பின்னர் விண்ணப்பதாரர்கள் எந்த மாற்றமும் செய்யமுடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இதனால், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், தங்கள் விண்ணப்ப படிவத்தை ஒருமுறை சரிபார்த்து ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் கடைசி நேரத்திற்கு முன்பே மாற்றவும். 

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,074 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் ஐபிபிஎஸ் என்று அழைக்கப்படும் வங்கி பணியாளர்கள் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு கடந்த செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி இன்றுடன் (அக்.9ம் தேதியுடன்) முடிவடைய உள்ளது. 

இந்த கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கணினியை இயக்க தெரிந்திருப்பது கட்டாயமாகும். 

கணினி அடிப்படையிலான முதல்நிலை தேர்வு (preliminary examination) வரும் டிசம்பர் (2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதன்மைத் தேர்வு (மெயின்ஸ் தேர்வு)  2020, ஜனவரி 19 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

more Jobs News

.