This Article is From Sep 17, 2019

IBPS Clerk : பொதுத்துறை வங்கி கிளார்க் தேர்வுக்கான பதிவு தொடங்கியது

IBPS Clerk Exam: பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு மாநில வாரியாகவும் யூனியன் பிரதேசம் வாரியாகவும் செய்யப்படவுள்ளது. தகுதியுள்ள நபர்கள் எந்த மாநிலத்தின் காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.

IBPS Clerk : பொதுத்துறை வங்கி கிளார்க் தேர்வுக்கான பதிவு தொடங்கியது

பிரதான தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் தகுதி பட்டியலுக்கு பரிசிலீக்கப்படும் .

New Delhi:

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர்  தேர்வாணையம் அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க 

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு மாநில வாரியாகவும் யூனியன் பிரதேசம் வாரியாகவும் செய்யப்படவுள்ளது. தகுதியுள்ள நபர்கள் எந்த மாநிலத்தின் காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.

20 முதல் 28 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள். எதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் முதல் நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மூல தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் மூன்று பிரிவுகள் இருக்கும் ஆங்கில மொழி, எண் திறன் மற்றும் பகுத்தறிவு திறன் ஒவ்வொன்றும் 20 நிமிட கால அளவு. தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். 

முதற்கட்டத் தகுதி பெற்றவர்கள் பிரதான தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இந்த தேர்வில் நிதியியல், பொது ஆங்கிலம், அளவு சார்ந்த திறன், மற்றும் கணினி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் இருக்கும். தேர்வு 160 நிமிடங்கள் இருக்கும். மொத்தம் 200 மதிப்பெண்கள் 

பிரதான தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் தகுதி பட்டியலுக்கு பரிசிலீக்கப்படும் . 

ஐபிபிஎஸ் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 9 ஆகும். 

.