This Article is From Sep 17, 2019

IBPS PO: வங்கி பி.ஓ தேர்வுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது

இந்த ஆட்சேர்ப்பு மூலம் 4336 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.

IBPS PO: வங்கி பி.ஓ தேர்வுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது

IBPS PO: தேர்வுகள் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளது.

New Delhi:

பொதுத்துறை வங்கிகளில் நன்னடத்தை அலுவலருக்கான (Probationary Officer) தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஐபிபிஎஸ் பிஓ தேர்வுக்கான ஆரம்ப கட்ட தேர்வுகள் அக்டோபர் 12,13,19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறுகிறது. தேர்வுக்கான செயல்முறையில் பிரதான தேர்வு மற்றும் நேர்காணலும் அடங்கும். இந்த தேர்வுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

ஐபிபிஎஸ் பிஓ தேர்வுக்கு முந்தைய பயிற்சிகள்

எஸ்.சி/ எஸ்.டி, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு நோடல் வங்கிகள்/ பங்கேற்கும் அமைப்புகளால் தேர்வுக்கு முன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி இலவசமாக இருக்கும். ஆனால் பயணம், தங்குமிடம், உணவு போன்ற பிற செலவுகளை தனி நபர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பி.ஓ ஆட்சேர்புக்கான  தேர்வுக்கு முந்தைய பயிற்சி செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறும். 

தேர்வுக்கான பயிற்சி முடிந்ததும், ஐபிபிஎஸ் பிஓ-க்கான ஆரம்ப கட்ட தேர்வுக்கான அட்மிட்  கார்டுகளை வெளியிடும் 

இந்த ஆட்சேர்ப்பு மூலம் 4336 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. 

.