இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியுடன் சில சட்ட ரீதியான பிரச்சனையை சந்திக்கவுள்ளது. பிசிசிஐ பாகிஸ்தானுக்கு 60 சதவிகித தொகையை இழப்பீடாக தர வேண்டும் என்று கூறியிருந்தது ஐசிசி. தற்போது 161 கோடி ரூபாயை இழப்பீடாக தர வேண்டும் இல்லையென்றால் 2023 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்தியா 2021ம் ஆண்டு சாம்பியன் கோப்பை மற்றும் 2023ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பிசிசிஐ ஐசிசியின் கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்தால் இந்த வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான வரி விலக்கு குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. பிசிசிஐயும் பதிலுக்கு ஐசிசியின் கூட்டம் குறித்த ஆவணங்களை கேட்டிருந்தது. ஆனால் அதனை ஐசிசி இன்னும் வழங்கவில்லை.
அவர்கள் அப்படி ஒரு கூட்டம் நடந்ததற்கான எந்த ஆதரத்தையும் காட்டவில்லை. அவர்களுக்கு இந்தியாவிடமிருந்து இழப்பீடை பெற வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கூறிய பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் ஐசிசியால் ''யாரும் பணம் காய்க்கும் மரத்தை வெட்ட மாட்டார்கள்'' என்று ஐசிசியை விமர்சித்துள்ளார். இந்தியாதான் ஐசிசியின் பிரதான சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.