This Article is From Apr 11, 2019

டாக்சி மேலே ஸ்கோர்போர்டு கலக்கும் ஹைதராபாத்!

ஹைதரபாத்தில் டாக்சியின் மேல் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு ஐபிஎல் லைவ் ஸ்கோர்கள் காட்டப்படுகின்றன

டாக்சி மேலே ஸ்கோர்போர்டு கலக்கும் ஹைதராபாத்!

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. உலகின் சிறந்த டி20 லீக் தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு ஐபிஎல் போட்டிகள் மக்களுக்கு ஒளிபரப்பப் படுகின்றன.

இதன் இன்னொரு புதிய முயற்சியாக ஹைதரபாத்தில் டாக்சியின் மேல் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு லைவ் ஸ்கோர்கள் காட்டப்படுகின்றன. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாலை நேரங்களில் அலுவலகங்களிலிருந்து பயணிப்பவர்களுக்கு ஐபிஎல் ஸ்கோர் அறிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை இது போக்குவதாக கூறப்படுகிறது.

இந்த டாக்சி ஸ்கோர்போர்டு படம் வைரலானது. இதனை ஐசிசி கிரிக்கெட் "வாழ்க்கையான தருணம்" என்ற வாசகத்தோடு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற புதிய முயற்சிகளை ஐபிஎல்லை வைத்து பலரும் செய்து வருகிறார்கள்.

.