Read in English বাংলায় পড়ুন
This Article is From Jan 24, 2019

ஐ.சி.ஐ.சி.ஐ. கடன் விவகாரம் : வீடியோகான் மும்பை அலுவலகத்தில் சிபிஐ சோதனை

கடந்த அக்டோபர் மாதத்தின்போது ஐசிஐசிஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து சாந்தா கொச்சார் விலகினார். அந்த வங்கியில் இருந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ. 3,250 கோடி கடனை சாந்தாவின் கணவர் பெற்றுத்தந்தார் என்பது குற்றச்சாட்டு.

Advertisement
இந்தியா
Mumbai:

ஐசிஐசிஐ கடன் விவகாரம் தொடர்பாக வீடியோகான் மும்பை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு கடந்த 2012-ம் ஆண்டின்போது ரூ. 3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அப்போது வங்கியின் தலைவராக சாந்தா கொச்சார் இருந்தார். 

சாந்தாவின் கணவர் தீபக் கொச்சார் நுபவர் ரின்யூபிள்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் வீடியோகான் நிறுவனத்தின் வேணுகோபால் தூத் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிலையில் வீடியோகான் நிறுவனத்திற்கு தீபக் கொச்சார் தன் மனைவி மூலமாக ரூ. 3,250 கோடி கடனை பெற்றுத் தந்ததாகவும், இதன் மூலம் சாந்தா கொச்சார், தீபக் கொச்சார் உள்ளிட்டோர் பலன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த புகார்கள் வலுவடைந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சாந்தா கொச்சார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மும்பையில் உள்ள வீடியோகான் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து சோதனை நடத்தியது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

முன்னதாக சாந்தா கொச்சார் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஐசிஐசிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisement