বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 06, 2018

அடுத்த ராகேஷ் உன்னி: பாட்டால் இணையத்தைக் கலக்கும் பாகிஸ்தான் பெயிண்டர்

இவ்வீடியோவில் பாகிஸ்தானின் முகம்மத் ஆரிஃப் என்னும் பெயிண்டர் ஹமாரி அதூரி கஹானி, சன்னா மேரேயா போன்ற பாடல்களைப் பாடுகிறார்.

Advertisement
விசித்திரம்

எளியோரின் திறமையைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதில் இணையத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லை. சில மாதங்களுக்கு முன்புதான் ‘dancing uncle’ சஞ்சய் ஸ்ரீவத்சவ என்னும் பெயர் அவரது அசாத்திய நடன அசைவுகளால் எல்லாரிடமும் பிரபலமாகியது. இம்முறை மேலும் ஒரு திறமையாளரை இணையம் ஒன்றிணைந்து பிரபலமாக்கியுள்ளது. பாகிஸ்தானின் பெயிண்டர் பல பிரபலமான பாலிவுட் பாடல்களைப் பாடியுள்ள வீடியோவும் அதனையொட்டி உருவாக்கப்பட்ட பல வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஹமாரி அதூரி கஹானி, சன்னா மேரேயா, பிர் லே ஆயா தில் போன்ற உணர்வுமிக்க பாடல்களை ஃபேஸ்புக் லைவ்வில் தன் வேலையையும் ஒருபுறம் பார்த்துக்கொண்டே முகம்மது ஆரிஃப் பாடியதற்கு நெட்டிசன்கள் கூடி லைக்கிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 1 அன்று பதிவிடப்பட்ட இக்காணொளி இதுவரை 37 இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது, 96000 பேர் விருப்பக்குறிகளை இட்டுள்ளனர், 66,000 பேர் பகிர்ந்துள்ளனர். இக்காணொளியை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவேற்றிய பிற வெர்சன்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Advertisement

நீங்களும் கீழே உள்ள வீடியோவில் ஆரிஃப்-இன் பாடலைக் கேளுங்கள்:

 
 

பலரும் கண்ணில் நீரை வரவழைக்கிறது, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம், இயற்கையான குரல்வளம், இவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், பிரபலமாகத் தகுதியுடையவர் இவர் என்றெல்லாம் இதற்கு கமெண்டுகளில் பாராட்டு குவிகின்றது.

தற்போது முகம்மது ஆரிஃப் தனக்கென்று தனி பக்கத்தை ஃபேஸ்புக்கில் உருவாக்கி மேலும் ஒரு வீடியோவை வெள்ளியன்று போஸ்ட் செய்துள்ளார்.

 
 

முகம்மத் ஆரிஃபின் பாடல் பற்றியும் அவரது குரலைப் பற்றியும் நீங்கள் நினைப்பதையும் கீழே கமெண்டில் கூறலாமே.

Advertisement