சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
தமிழகத்தில் காணாமல் போன சிலைகளை மீட்கும் நடவடிக்கையில், சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலும் அவரது குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் சைதாப்பேட்டையில் நடந்த சோதனையில் 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால் சிலை கடத்தல் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஓர் அதிரடி நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயிலில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு நேற்று அதிரடி ஆய்வை மேற்கொண்டது. இதன்பின்னர் கோயில் நிர்வாகிகளுடன் பொன் மாணிக்கவேல் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் விரைவில் ஏதேனும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பாக பொன் மாணிக்கவேலின் பணியின் திருப்தி இல்லை என்று கூறிய தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்த சிபிஐ, தங்களிடம் போதிய ஆட்கள் இல்லாததால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)