This Article is From Dec 08, 2018

மேகதாதுக்கு அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைபாடு என்ற அணை உடையும்: வைகோ

மேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைபாடு என்ற அணை உடையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை எச்சரித்துள்ளார்.

மேகதாதுக்கு அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைபாடு என்ற அணை உடையும்: வைகோ

மேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைபாடு என்ற அணை உடையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்ட மத்திய அரசு உதவுகிறது. இதேதான் முல்லைப்பெரியாரில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பாலாற்றில் தடுப்பனை கட்டிய ஆந்திர அரசு தண்ணீர் கொடுப்பதற்கு மறுக்கிறது. 

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. இப்படியே தொடர்ந்தால் எதற்காக இந்தியாவில் இருக்க வேண்டும்? தனியாக தமிழ்நாடு இருந்தால், ஐ.நா சபையில் நீதி கேட்டு பெறலாம் என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவிற்கு அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால், இந்திய ஒருமைப்பாடு என்கிற அணை உடைந்தே போகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கஜா புயல் சுனாமியை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விவசாயம் அழிந்துவிட்டது. ஒன்றரை லட்சம் விவசாயக் குடும்பங்கள் அடியோடு அழிந்துவிட்டன. இனி அவர்களால் எழ முடியாது. 
இதற்கு குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் கோடியாவது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் ரூ. 353 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.



 

.