This Article is From Oct 31, 2018

பட்டாசு வெடித்தால் குழந்தைகள் மீதும் சட்டத்தை புகுத்துவீர்களா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதில் 90 சதவீத்திற்கு மேல் குழந்தைகள் என்பதால் அவர்கள் மீது சட்டத்தை புகுத்துவீர்களா என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்

Advertisement
இந்தியா Posted by

தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதில் 90 சதவீத்திற்கு மேல் குழந்தைகள் என்பதால் அவர்கள் மீது சட்டத்தை புகுத்துவீர்களா என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சுதந்திரமாக கருத்து கூறுவதற்கு இந்த அரசு தான் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனை அவர் சுய சோதனை செய்ய வேண்டும்.

தம்பிதுரை, டிடிவி தினகரன் போன்றவர்கள் கூறுவதை கேட்டு அதிமுக அரசு மிரட்டப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கலாம்.

Advertisement

பட்டாசு வெடிப்பது பெரியவர்கள் அல்ல, பட்டாசு வெடிப்பதில் 90 சதவீதத்திற்கும் மேலான குழந்தைகளே பட்டாசு வெடிப்பார்கள். அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்? குழந்தைகளிடம் சட்டத்தை புகுத்த போகிறீர்களா?

என்ன நடக்கப்போகிறது? எது சாத்தியப்படும்? வீட்டுக்கு வீடு காவல்துறை போட போகீறீர்களா? அல்லது ஒரு தெருவுக்கு ஒரு போலீஸ் குழுவை போட போகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement
Advertisement