This Article is From Nov 18, 2018

வெற்றி பெற்றால் விவசாய கடன் தள்ளுபடி – சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முதல்வர் ராமன் சிங்கின் குடும்பம் ஊழல் செய்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வெற்றி பெற்றால் விவசாய கடன் தள்ளுபடி – சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்வதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

Koriya (Chhattisgarh):

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தங்கள் கட்சி வெற்றி பெற்றால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விடுவோம் என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

சத்தீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ள நிலையில் 2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி கோரியா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது-

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கனிம வளங்கள் மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஏழை மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். நாங்கள் வெற்றி பெற்றால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விடுவோம். ரூ. 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கார்ப்பரேட் கடன்களை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்திருக்கிறார்.

விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக்கூட மோடி ரத்து செய்யவில்லை. மக்களுக்கு முன்பு பொய் கூறுவதை மட்டுமே மோடி வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

முதல்கட்டமாக மாவோயிஸ்டுகள் பாதிப்பு நிறைந்த 18 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அடுத்தகட்டமாக 20-ம் தேதி 72 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. முடிவுகள் வரும் டிசம்பர் 11-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.

.