This Article is From Dec 11, 2019

“தனியொருவனுக்கு உணவில்லை எனில்…”- பாரதியாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Bharathiyar - 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார்

“தனியொருவனுக்கு உணவில்லை எனில்…”- பாரதியாரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Bharathiyar - தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 137வது பிறந்தநாள் இன்று. புரட்சிக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பல முகங்களைக் கொண்ட பாரதியின் புகழைப் பற்றியும் மேன்மையைப் பற்றியும் பல பிரபலங்களும் பகிர்ந்து வருகின்றனர். பாரதியின் பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், அவரை நினைவு கூர்ந்துள்ளார். பாரதி குறித்து தமிழில் ட்வீட் செய்து புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி. 

“மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின்  பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது,” என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. 

.