This Article is From Mar 14, 2020

கமல் - ரஜினி இணைந்தால் பலவீனமடையுமா திமுக - அதிமுக? ஜெயக்குமார் கருத்து

ரஜினி தன் கொள்கை, லட்சியத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் முதலில் அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும். அதன்பிறகு எங்கள் கருத்தைச் சொல்கிறோம்.

கமல் - ரஜினி இணைந்தால் பலவீனமடையுமா திமுக - அதிமுக? ஜெயக்குமார் கருத்து

2021-ல் அதிமுக தனது ஆட்சியை நிலைநிறுத்தும் - ஜெயக்குமார்

ஹைலைட்ஸ்

  • ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஜெயக்குமார்
  • அனுமானத்திற்கு பதில் சொல்ல முடியாது
  • 2021-ல் அதிமுக தனது ஆட்சியை நிலைநிறுத்தும்

கமல், ரஜினி இணைந்தால் அதிமுக-திமுக பலவீனம் அடையுமா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவத்துள்ளார். 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வணிகர்கள் ஜிஎஸ்டியில் போலியான ரசீதுகளை கொடுத்து ஏமாற்றுவது சட்டப்படி குற்றமாகும். வரி ஏய்ப்பு செய்வது மிகப்பெரிய குற்றம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. புகார் அளிக்கப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே 292 சரக்குகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 24 சரக்குகளுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 42 சேவைகள் மீது வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 36 சேவைகள் மீது முழுமையாக வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வணிகர்கள், மக்களைப் பாதிக்கின்ற அம்சங்கள் அதில் இருந்தால் நிச்சயமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.

தொடர்ந்து, அவரிடம் கமல், ரஜினி இணைந்தால் அதிமுக-திமுக பலவீனம் அடையும் என்ற கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, ரஜினி தன் கொள்கை, லட்சியத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் முதலில் அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும். அதன்பிறகு எங்கள் கருத்தைச் சொல்கிறோம். அனுமானத்திற்கு பதில் சொல்ல முடியாது. 2021-ல் அதிமுக தனது ஆட்சியை நிலைநிறுத்தும் என்று கூறினார். .

மேலும், ஸ்டாலின் நடவு செய்வது போன்று வெளியான புகைப்படங்கள் எல்லாம் கிராபிக்ஸ் செய்யப்பட்டது. இப்போது அவ்வாறு செய்வது சர்வ சதாரணம். சிவப்புக் கம்பளம் விரித்து, ஷூ அணிந்துகொண்டு ஸ்டாலின் நடவு நட்டதை நாமெல்லாம் பார்த்தோம் என்று அவர் கூறியுள்ளார். 
 

.