This Article is From Mar 07, 2020

'இந்து மதத்தின் பாதுகாவலராக இருந்தால் ரஜினிக்கு உதவுவேன்' - சுப்ரமணிய சுவாமி

அரசியல் கட்சியைத் தொடங்கும் நடவடிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இறங்கியுள்ளார். ரஜினி மக்கள் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், விரைவில் கட்சியின் பெயர் தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'இந்து மதத்தின் பாதுகாவலராக இருந்தால் ரஜினிக்கு உதவுவேன்' - சுப்ரமணிய சுவாமி

தமிழகத்தில் இனிமேலும் மற்றொரு கட்சிக்கு இடமில்லை என்கிறார் சுப்ரமணிய சுவாமி.

ஹைலைட்ஸ்

  • ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு பணிகள் வேகம் அடைந்துள்ளன
  • தமிழ்நாட்டில் புதிய கட்சிகளுக்கு இடமில்லை என்கிறார் சுப்ரமணிய சுவாமி
  • ரஜினி தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்து மதத்தின் பாதுகாவலராக ரஜினிகாந்த் செயல்பட்டால் அவருக்கு உதவி செய்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்து மதத்தின் பாதுகாவலராக இருந்தால் ரஜினிக்கு நான் உதவி செய்வேன். தமிழ்நாட்டில் இன்னொரு அரசியல் கட்சிக்கு இடமில்லை என்று தெரிவித்தார். 

தொடர்ந்து அவரிடம், 'ரஜினியும் கமலும் இணைந்து அதிமுகவுக்கு நிகராக வர வாய்ப்புள்ளதா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'முதலில் குழந்தை பிறக்கட்டும். அதன்பிறகு பெயர் என்னவென என்னிடம் கேளுங்கள்' என்று கிண்டலாகப் பதிலளித்தார். 

அரசியல் கட்சியைத் தொடங்கும் நடவடிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இறங்கியுள்ளார். ரஜினி மக்கள் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய அவர், விரைவில் கட்சியின் பெயர் தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மற்றும் மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதேபோல், இந்த படத்திற்குப் பின்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் படம் பண்ணுவதற்கு ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

தொடர்ந்து, ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளதோடு, உயர்மட்ட தலைவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பவும் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. 

.