This Article is From Jul 01, 2018

'சுவிஸ் வங்கியில் வெள்ளை பணம் என்றால், கருப்பு பணம் எங்கே' - காங்கிரஸ்

கடந்த 2016 ஆம் ஆண்டை காட்டிலும், 50 சதவித பணம் அதிகமாக இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சுவிஸ் வங்கியில் வெள்ளை பணம் என்றால், கருப்பு பணம் எங்கே' - காங்கிரஸ்

ஹைலைட்ஸ்

  • கருப்பு பணம் மீட்கப்படும் என 2014ல் பிஜேபி தேர்தல் வாக்குறுதி அளித்தது
  • மே மாதம், நிதி அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்றார்
  • சுவிஸ் வங்கியில் இருக்கும் அனைத்தும் கருப்பு பணம் அல்ல: பியூஷ் கோயல்
NEW DELHI:

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, பியூஷ் கோயல் கூறிய கருத்துகளுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கேள்வி எழுந்துள்ளது.

சுவிஸ் வங்கியில் உள்ள பணங்கள் அனைத்தும் கருப்பு பணமாக இருக்க வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கூறியதை நினைவு கூர்ந்தனர் காங்கிரஸ் தரப்பினர். சுவிஸ் வங்கியில் உள்ளது கருப்பு பணம் தான் என்று குழந்தைகளுக்கும் தெரியும் என பிரதமர் கூறிய கருத்தினையையும், அமைச்சர்கள் கூறிய முரண்பாடான கருத்தினையும் சுட்டிக்காட்டி, இதில் உண்மை எது என்று காங்கிரஸ் அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா, “சுவிஸ் பணம் வெள்ளையானது என்றால், கருப்பு பணம் எங்கே” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

 

Dear Modiji,

On 22nd Dec,2013; you said every child knows ‘Black Money is kept in Swiss Banks’.

On 29th June,2018; your FM’s say ‘It’s stupid to say money in Swiss Banks is Black’.

Which one of these two statements is ‘Stupid’?If Swiss Money is ‘white’, where is ‘Black Money’? pic.twitter.com/F0nyTafIX8

- Randeep Singh Surjewala (@rssurjewala) June 30, 2018

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை பெற்றாலே, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 முதல் 20 லட்சம் பணம் முதலீடு செய்யலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியர்கள் வைத்திருக்கும் சுவிஸ் கணக்குகளின் அறிக்கையை சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016 ஆம் ஆண்டை காட்டிலும், 50 சதவித பணம் அதிகமாக இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​2018 ஆம் ஆண்டு மே மாதம் முதல், பியூஷ் கோயல் மத்திய நிதி துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சை பெற வேண்டி இருந்ததால், தற்காலிகமாக பியூஷ் கோயல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனினும், கடந்த வாரம் ஓய்வு பெற்ற அரசு தலைமை பொருளாதார அதிகாரி அரவிந்த் சுப்ரமணியனுக்கு, அமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வெள்ளி கிழமை அன்று சுவிஸ் வங்கி வெளியிட்ட அறிக்கை குறித்து அரசுக்கு அதரவாக பேசினார்.

.