This Article is From Apr 22, 2019

வாரணாசியில் மோடி Vs பிரியங்கா காந்தியா..?- என்ன சொன்னார் பிரியங்கா?

வாரணாசியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் 29 ஆம் தேதி வரை பெறப்படும்

மே 19 ஆம் தேதி வாரணாசியில் தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.  

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார்
  • இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் தீவிர அரசியலில் குதித்தார் பிரயங்கா
  • கட்சி விரும்பினால் வாரணாயில் போட்டி, பிரயங்கா
New Delhi:

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது என்று பரபரக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரியங்கா பேசியுள்ளார். 

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக, பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின்படி எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார்' என்று கூறினார். மேலும் பிரதமரை எதிர்த்து போட்டியிட மகிழ்ச்சியுடன் இருப்பதாக பிரியங்கா தெரிவித்தார்.

2019 நாடளுமன்ற தேர்தலை குறிவைத்து கடந்த பிப்ரவரியில் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராகவும், காங்கிரஸின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் பிரியங்கா. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்தவொரு தெளிவான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. 

தனது தயாரைப் போல் அல்லாமல், பாட்டி இந்திரா காந்தியைப் போல துணிச்சலுடன் அரசியல் களத்தில் பிரயங்கா செயல்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

பிரயங்கா தனது அரசியல் செயல்பாடுகளை 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரம் காட்டியிருந்தால் தற்போதைய தேர்தலில் பெரிய அளவிலான தாக்கம் எற்பட வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

வாரணாசியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் 29 ஆம் தேதி வரை பெறப்படும். அதைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி அங்கு தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
    


 

.