বাংলায় পড়ুন हिंदी में पढ़ें
This Article is From Dec 27, 2019

'2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர்' - CAA விவகாரத்தில் ராகுலை விமர்சித்த பாஜக!!

என்.பி.ஆர்.மற்றும் என்.சி.ஆர். எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, அவை ஏழைகள் மீது விதிக்கப்பட்ட வரி என்று கூறியிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஏழைகள் மீது விதிக்கப்பட்ட வரி என்று ராகுல் விமர்சித்திருந்தார்.

New Delhi:

குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பாகவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாகவும் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவை ஏழை மக்கள் மீது விதிக்கப்பட்ட வரி என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, 2019-ம் ஆண்டுக்கான மிகப்பெரிய பொய்யர் என்ற பிரிவு இருந்தால் அதற்கு ராகுல்தான் பொருத்தமானவர் என்று கூறியுள்ளது. 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும், மத்திய பாஜக அரசு மீதும், குடியுரிமை சட்ட திருத்தம், என்.பி.ஆர். மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டியில், 'என்.பி.ஆர். என்பது பணத்தை மாற்றுவது தொடர்பானது அல்ல. தகவல் பரிமாற்றம் மட்டுமே இதில் நிகழும். ஏழை மக்கள் யார் என்பதை அறிந்து அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை அளிக்க இந்த தகவல் உதவும்.

Advertisement

ராகுல் காந்தி கட்சியின் தலைவராக இருந்தபோது என்ன வேண்டுமானாலும் பேசுவார். எப்போதும் பொய்யையே பேசுவார். இப்போது அவர் கட்சியின் தலைவர் இல்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து பொய் பேசுகிறார். இந்தாண்டுக்கான சிறந்த பொய்யர் என்ற பிரிவு ஒன்று இருந்தால், அந்த விருதை ராகுல் காந்தி தான் பெறுவார்.'  என்று தெரிவித்தார். 

முன்னதாக பேட்டியளித்த ராகுல் காந்தி, என்.பி.ஆர்., தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை ஏழை மக்கள் மீது விதிக்கப்பட்ட வரி என்று பேசியிருந்தார். 

Advertisement

'என்.ஆர்.சி., என்.பி.ஆர்., என எதுவாக இருந்தாலும் அது ஏழை மக்கள் மீது விதிக்கப்படும் வரி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏழை மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியாக இருந்தது. வங்கிக்கு சென்றாலும், அவர்களது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் இருந்தனர்.' என்று தேசிய பழங்குடியின நடன திருவிழா நிகழ்ச்சயின் போது பேசினார். 

'ஏழை மக்கள் அரசு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை அளிப்பார்கள். லஞ்சமும் அளிப்பார்கள். சிறிய தவறுஏதும் இருந்தாலும் கூட அதற்கு லஞ்சம் அளிக்க வேண்டியது நேரிடும். கோடிக்கணக்கான ஏழை மக்களின் பணம் பிடுங்கப்பட்டு அதே 15 பேரிடம் வழங்கப்படும். இதுதான் உண்மை. இது மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்' என்று ராகுல் குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

இடையே மோடியை விமர்சித்த ராகுல், மோடி செய்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டின் நேரம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பேசினார். 

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முன்னோட்டமாக கருதப்படும் என்.பி.ஆர்.யை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. என்.ஆர்.சி. மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Advertisement