This Article is From Aug 27, 2018

‘என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால்…’- பொங்கும் அழகிரி

‘என்னை திமுக-வில் சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நாங்கள் கட்சியைக் காப்பாற்ற விரும்புகிறோம்’ என்றுள்ளார்.

‘என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால்…’- பொங்கும் அழகிரி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கு ஆயத்தமாகி வருகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ‘என்னை மட்டும் கட்சியில் சேர்க்காவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் 8 ஆம் தேதி மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, சில நாட்களுக்குப் பின்னர் கருணாநிதி அடக்கம் செய்த இடத்துக்குச் சென்ற அழகிரி, ‘என் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்லவிட்டேன். அது குறித்து மக்களுக்கு விரைவில் தெரியவரும். திமுக-வின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் தான் உள்ளனர்’ என்று கருத்து கூறி பகீர் கிளப்பினார்.

தொடர்ந்து அவர், வரும் 5 ஆம் தேதி சென்னையில் அமைதி பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். ‘அமைதி பேரணியைத் தொடர்ந்து திமுக-வுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் வரும். என் தேர்தல் பணிகளையும், ஒருங்கிணைப்புப் பணிகளையும் எனது அரசியல் எதிரிகள் கூட பாராட்டுவர். சில திமுக தலைவர்கள் இப்போதாவது என்னைப் பற்றி தெரிந்து கொள்வர்’ என்றார்.

இந்நிலையில் இன்று அவர், ‘என்னை திமுக-வில் சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நாங்கள் கட்சியைக் காப்பாற்ற விரும்புகிறோம்’ என்றுள்ளார்.

அழகிரி திமுக தலைமைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க வரும் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. இந்த பொதுக் குழுக் கூட்டத்தில், செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், தலைவராக தே

.