Read in English
This Article is From Apr 11, 2019

6 உயர் கல்வி நிறுவனங்கள் இணைந்து பயோ பிக் டேட்டா சயின்ஸ் பயிற்சி குழுவை உருவாக்கியுள்ளது

ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், அலகாபாத் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன.

Advertisement
Education
Chennai:

6 முன்னணி உயர் கல்வி நிறுவனங்கள்,உயிரியல் பயன்பாடுகளில் பெரிய தரவு வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு பயோ பிக் டேட்டா சயின்ஸ்  என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞான துறையில் அடுத்த தலைமுறை பயிற்றுவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதில் ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், அலகாபாத் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன.

இந்த கல்வி நிறுவனங்களுடன் ஜெர்மனி  ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம்,  மற்றும் பயோடெக்னாலஜி துறை, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஆகியவை இதில் கூட்டு சேர்ந்துள்ளனர். 

Advertisement

இந்த ஒருங்கிணைப்பு பற்றி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மைக்கேல் ஜெ.வின்க்லர், கூறுகையில் “முன்னணி இந்திய நிறுவனங்களுடன் புதிய மற்றும் நீண்டகால ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க உதவும் என்பதை நம்புகிறோம். இந்த பயோடெக்னாலஜி துறைகளில் இரு நாடுகளிலும் ஆராய்ச்சி அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

ஆராய்ச்சி பயிற்சி திட்டமானது இந்தியா மற்றும் ஜெர்மன் நாட்டின்  முன்னணி விஞ்ஞானிகள் 50 பிச்.டி திட்டங்கள் கண்காணிக்கும் திறன் படைத்தது. 

Advertisement

இந்த திட்டத்தின் முதல் 2019 முதல் 2025க்கு இடையில் இரண்டு நாட்டு பங்குதாரர்களிடமிருந்து தலா 3 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய ஒப்பந்தமானது. இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற ஐஐடி மெட் ராஸ் நிறுவனத்தின் துணை பேராசிரியர் கார்த்திக் ராமன் பேசிய போது, “  பயோலாஜிக்கல் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தரவுசார் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் போஷ் மையம் ஆகிய இரண்டும் தரவுசார் அறிவியல் நிபுணத்துவம் பெற்றவை ஆகும். உயிரியல் தரவு பகுப்பாய்வில் எதிர்காலத்தில் பலர் நிபுணத்துவம் பெற்று வர இது மிகவும் உதவும் என்று கூறினார்”

Advertisement