கவலை மற்றும் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். (Representational)
Sangareddy, Telangana: ஹைதராபத்தில் உள்ள ஐஐடியில் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டிலேயே இது இரண்டாவது தற்கொலையாகும்.
20 வயதான மாணவர் மார்க் ஆண்ட்ரூ சார்லஸ் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் தன்னுடைய அறைக்கு சென்றதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமை பிற்பகலில் நண்பர்கள் சென்று கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போதுதான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அனைவரும் அறிந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். வாரணாசியைச் சேர்ந்த மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. பெற்றோர்களுக்கு முறைப்படி தகவலும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவரின் அறையில், அவரே கைப்பட எழுதிய டைரிக்குறிப்பு இருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். அந்த டைரிக் குறிப்பில், ‘என் வாழ்க்கை இப்படி முடியும்னு நான் நெனைக்கல. என்னைப் பிரிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். நான் எதற்கும் உபயோகமில்லாதவனாக உணர்கிறேன். நண்பர்கள் நண்பர்களாய் அன்பைக் காட்டினார்கள். அவர்களுக்கு திருப்பித்தர அன்புதான் உகந்தது. என் பெற்றோருக்கு நன்றி. என்னை மன்னித்துவிடுங்கள். நான் உபயோகமில்லாதவனாகி விட்டேன்' என்று எழுதியிருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
கவலை மற்றும் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.