This Article is From Oct 01, 2019

ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழா: தமிழரின் பாரம்பரிய உடையணிந்து பட்டம் பெற்ற மாணவர்கள்

கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் மாணவி “ஒரு குறிப்பிட்ட சித்தாந்த்தை முன் வைக்கும் மத்திய அரசுக்கு கலாசார வேறுபாட்டை முன்வைக்க தோன்றியது” என்று கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் கூறினார்.

ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழா: தமிழரின் பாரம்பரிய உடையணிந்து பட்டம் பெற்ற மாணவர்கள்

பட்டமளிப்பு விழாபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு கைத்தறி துணிகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்-யூஜிசி

Chennai:

ஐஐடி மெட்ராஸின் 56வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நீண்டகால பாரம்பரியம் மாற்றப்பட்டது.  பட்டமளிப்பு விழாவிற்கு பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய உடையை அணிய கல்வி நிர்வாகம் பரிந்துரைத்தது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் வெள்ளை சட்டை அல்லது வெள்ளை நிற குர்தாவும் அதே நிறத்தில் வேஷ்டி, அல்லது பைஜாமா மற்றும் பேண்டுகள் அணிந்திருந்தனர். 

மாணவிகள் ஒரே நிறத்தில் சல்வார் கமீஸ் அல்லது சேலை அணியுமாறு கூறப்பட்டது. மாணவிகள் என்ன உடை அணிந்திருந்தாலும் வெள்ளை நிறத்தில் அங்கவஸ்திரத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதனை கல்லூரி நிர்வாகமே ரூ.  350 கொடுத்து வாங்க வேண்டுமென அறிவுறுத்தியது. 

சில பட்டதாரிகள் இந்த மாற்றம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். 

ஆந்திராவைச் சேர்ந்த தொழில்நுட்ப மாணவர் NDTVயிடம் பேசிய போது, “எனக்கு இந்த உடை மிகவும் பிடித்திருந்தது. இதற்கு முன்பு பி.டெக் மாநாட்டிற்கு மேற்கத்திய ஆடைகளை அணிந்திருந்தேன்.” என்று கூறினார்.

சிலர் வேறுவிதமான எதிர்வினைகளை வெளிப்படுத்தினர். 

கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் மாணவி “ஒரு குறிப்பிட்ட சித்தாந்த்தை முன் வைக்கும் மத்திய அரசுக்கு கலாசார வேறுபாட்டை முன்வைக்க தோன்றியது” என்று கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் கூறினார்.

ஜூன் மாதத்தில் பல்கலைக்கழக மானிய ஆணையம் பல்கலைக்கழங்கள் தங்களுடைய பட்டமளிப்பு விழாபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. 

 கடந்த ஆண்டு ரூர்க்கி, பம்பாய் மற்றும் கான்பூரில்  உள்ள ஐ.ஐடிக்கள் மாணவர்களை மேற்கத்திய உடைகளுக்கு பதிலாக இந்திய ஆடைகளை அணியுமாறு  கேட்டுக் கொண்டன. 

அமெரிக்காவில் நடந்த ஆடம்பரமான நிகழ்வான ‘ஹவுடி, மோடி!' நிகழ்ச்சியில் பெற்ற ராக் ஸ்டார் வரவேற்பை போன்று சென்னையிலும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.  

.