டெக் எம்பிஏ பாடத்திட்டம் கல்வி ரீதியாக ட்ரெண்ட் செட்டராக இருக்கும்
Chennai:
சென்னை ஐஐடியில் 5 வருட ஒருங்கிணைக்கப்பட்ட எம்.பி.ஏ பாடப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இளநிலை மாணவர்களின் பொறியியல் படிக்கும் வாய்ப்பினை இது வழங்கிறது. டெக் எம்.பி.ஏ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. டெக் எம்.பி.ஏவில் திட்டத்தை பொறியியலில் இளநிலை பட்டம் மற்றும் மேலாண்மையில் முதுகலை பட்டம் என இரண்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றன
இந்த திட்டம் ஐடிடிடி திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை துறையின் இதன் கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது. நிறுவனம் 2019-20 வரை கல்வியாண்டில் இருந்து இந்ததிட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் 25-30 மாணவர்களை எடுக்கலாம் எனத் தெரிகிறது,
டெக் எம்பிஏ பாடத்திட்டம் கல்வி ரீதியாக ட்ரெண்ட் செட்டராக இருக்கும் என்று நம்புகிறோம். தொழில்நுட்ப ஆழம், நிர்வாகம் குறித்த கூடுதல் நுட்பமான புரிதல் ஆகியவை அடுத்த தலைமுறைகளின் வளர்ச்சியில் முன்னேற்றத்தை கொடுக்கும் என தெரிவிக்கின்றனர்.