This Article is From Jan 02, 2019

ஐஐடி மெட்ராஸ் பிஎச்டி மாணவி தற்கொலை! பகீர் தகவல்

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவி தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை

ஐஐடி மெட்ராஸ் பிஎச்டி மாணவி தற்கொலை! பகீர் தகவல்

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

Chennai:

ஜார்கண்டை சேர்ந்த பெண் ஆராய்ச்சி அறிஞர் ஒருவர் கடந்த செவ்வாய் கிழமையன்று, தூக்கில் தொங்கிய நிலையில் தனது விடுதி அறையில் கண்டுபிடிக்கப்பட்டார். ரஞ்சனா குமார் என்னும் அப்பெண் மெட்டலர்ஜி துறையில் முனைவர் பட்டத்திற்காக படித்து வந்ததாக தகவல் வெளியானது. 

கல்லூரி வளாகத்தில் உள்ள சபர்மதி பெண்கள் விடுதியில் தங்கி இருந்த அப்பெண்ணின் அறையில் தற்கொலைக்கான காரணக்கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. இது போன்ற தற்கொலைகள் ஐஐடி வளாகத்தில் சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐஐடி- மெட்ராஸ்சில்  இறுதி ஆண்டு கப்பல் கட்டுமானக் கல்வியை படித்துக்கொண்டிருந்த கேரளாவில் உள்ள மலப்புரத்தை சேர்ந்த ஷாகுல் கோர்நாத் (23) தனது அறையில் தூக்கிட்டுக் கொண்டார். அந்த தற்கொலையின் போதும் தற்கொலை கடிதம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இதேபோல கடந்த ஜூலை மாதம் 2016-ல் பெண் ஆராய்ச்சி அறிஞர் ஒருவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் அதே நாளில் கல்லூரி வளாகத்திற்குள்ளே வசித்துவந்த போராசிரியரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட இரு பெண்களுக்கும்  குழந்தைகள் உண்டு என்பது கூடுதல் தகவல்.

.