This Article is From Aug 09, 2018

இந்தியாவில் சுவீடன் பிராண்டு! பிரத்யேக ஐகேஇஏ ஸ்டோர் ஹைதரபாத்தில் தொடக்கம்

ஹைதரபாத்தில், 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஐகேஇஏ ஸ்டோர், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

இந்தியாவில் சுவீடன் பிராண்டு! பிரத்யேக ஐகேஇஏ ஸ்டோர் ஹைதரபாத்தில் தொடக்கம்
Hyderabad:

ஹைதரபாத்: பிரபலமான ஐகேஇஏ சுவீடன் பிராண்டு, வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டோர், இந்தியாவில் முதல் கிளையை தொடங்கியுள்ளது. ஹைதரபாத்தில், 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஐகேஇஏ ஸ்டோர், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில், மேலும் 25 கிளைகள் இந்தியாவில் தொடங்கும் திட்டத்தில் ஐகேஇஏ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஐகேஇஏ ஸ்டோரில் விற்பனைக்கு உள்ளது

ஹைதரபாத் ஐகேஇஏ ஸ்டோரின் முக்கிய அம்சங்கள்

1.    ஸ்டோர் தொடங்குவதற்கு 90 நிமிடங்க்ள் முன்னரே மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். ஸ்டோர் திறப்பு விழாவிற்கு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர்
2.    சுவீடன் விளம்பர தூதர் கிளாஸ் மோலின், தெலுங்கானா அமைச்சர் கே.டி ராமா ராவ் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
3.    1,000க்கும் மேற்பட்ட பொருட்கள் 200 ரூபாய்க்கு கீழ் விற்கப்படுகிறது. 
4.    1,000 பேர் அமரக்கூடிய கஃபேயில், மாட்டுக்கறி, பன்றிக்கறி உணவுகளுக்கு பதிலாக சிக்கன் உணவுகள் வைக்கப்படுள்ளது.
5.    பாரம்பரிய காலை உணவுகளுடன் கடை திறப்பு விழா தொடங்கப்பட்டது.
6.    பில்லி புத்தக அலமாறி, க்ளிப்பான் ‘லவ் சீட்ஸ்’ஆகியவை பிரபலமான பொருட்களாக உள்ளது. இந்திய மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மசாலா டப்பாக்கள், தவா, ப்ரையிங் பேன், தேங்காய் பைபர், கேக் மேக்கர் ஆகியவை விற்பனைக்கு உள்ளது
7.    ‘டூ இட் யுவர்செல்ஃப்’ பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு உள்ளது. அர்பன் க்ளாப் நிறுவனத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறது.
8.    IKEAவின் அடுத்த ஸ்டோர் மும்பை, குர்கான், பெங்களூரு போன்ற பகுதிகளில் தொடங்கப்பட உள்ளது. மேலும், சென்னை, கொல்கத்தா, பூனே, அகமதாபாத் போன்ற பகுதிகளிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
9.    950 பணியாளர்கள் நேரடியாகவும், 1500 பணியாளர்கள் மறைமுகமாகவும் IKEA நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
10.    குறிப்பாக, 50% பெண் பணியாளர்களை பணி அமர்த்தும் திட்டத்தில் IKEA நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
 

.