Read in English
This Article is From Nov 01, 2018

கிளினிக்கில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

உத்தரப்பிரதேசத்தில் உரிய அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 50 லட்சம்

Advertisement
நகரங்கள்

கிளினிக்கின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Lucknow:

உத்தரப் பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்பாக சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எடாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கிளினிக்கை சீல் வைத்த அதிகாரிகள் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ. 50 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கிளினிக் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு தயாரிப்பது தொடர்பான எந்த ஒரு உரிமமும் அவரிடத்தில் இல்லை என போலீசார் கூறியுள்ளனர். 

Advertisement