हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 03, 2019

தாமதிக்காமல் உடனடியாக புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்: ராகுல்

மக்களவை தேர்தலில் கட்சியை வழிநடத்திய ராகுல் கடும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கடந்த மே.25ஆம் தேதி ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

இனியும் தாமதிக்காமல் உடனடியாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தான் ஈடுபடபோவதில்லை என்றும் தான் ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இனியும் தாமதிக்காமல் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நான் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால் நான் கட்சி தலைவர் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

இதற்காக காங்கிரஸ் செயற்குழு கூடி உடனடியாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். மேலும், தான் ராஜினாமா முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்பதில் தான் திட்டவட்டமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போதும் தனது முடிவில் தீர்மானமாக இருப்பதாகவும், புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தான் ஈடுபடபோவதில்லை என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒரே குடும்பம் கட்சியை வழிநடத்துவது, பொறுப்புடைமை இல்லாமை உள்ளிட்ட காரணங்களே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் 44 தொகுதிகளை கைப்பற்றி தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டவாது முறையாக 52 தொகுதிகளை கைப்பற்றி, இந்தமுறையும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

மேலும், இந்த தோல்வியிலும் முக்கியமாக பேசப்பட்டது, ராகுலின் குடும்ப தொகுதியான அமேதியில், பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி ராணியிடம், ராகுல் காந்தி தோல்வியுற்றதே. எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது.

Advertisement

இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்கவில்லை. எனினும், ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

Advertisement