இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாகவுள்ளது
Washington: இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்தத்தை விட ‘மிகவும் பலவீனம்' காரணமாக இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாகவுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கார்ப்ரேட் மற்றும் ஒழுங்குமுறையின் நிச்சயமற்றதன்மை மற்றும் சில வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பலவீனமே இதற்கு காரணம்.
சர்வதேச நாணய நிதியத்தின் செய்தி தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் “பொருளாதார வளர்ச்சி குறித்த புதிய கணிப்புகள் விரைவில் பெறுவோம். ஆனால் இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகவும் பலவீனமாக உள்ளது. முக்கியமாக கார்ப்ரேட், ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனம் வளர்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது.” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அரசின் தகவலின் படி பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது.
ஐ.எம்.எஃப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை 2019-20 நிதியாண்டில் 0.3 சதவீத புள்ளிகள் குறைந்து 7 சதவீமாக குறைத்துள்ளது. உள்நாட்டு தேவைகள் எதிர்பார்த்ததை விட பலவீனமாக உள்ளது. முந்தைய அறிக்கையில் 7.5 சதவீத வளர்ச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வளர்ச்சி நிதியாண்டில் 7.2 சதவீத புள்ளிகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி துறையில் கூர்மையான சரிவு மற்றும் விவசாய துறையில் மந்தநிலை பெரும்பாலும் ஏற்பட்டது என்று புள்ளி விவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.