Read in English
This Article is From Sep 21, 2018

‘உடனடியாக தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்!’- அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கிறது

Advertisement
உலகம்

அமெரிக்காவின் நடவடிக்கை முறையற்றது, சீனா குற்றச்சாட்டு

Highlights

  • சீன ராணுவம் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது
  • சீன ராணுவம், ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கியது
  • அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
Beijing, China:

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீன ராணுவத்துக்கு பல வரி விதிப்புகளை போட்டுள்ளது அமெரிக்க அரசு. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சீனா.

நேற்று அமெரிக்க அரசு, சீன ராணுவத் துறைக்குக் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதங்கள் வளர்ச்சித் துறைக்கு, வரி விதிப்புகளை போடுவதாக அறிவித்தது. ரஷ்யாவிடமிருந்து சு-35 ரக விமானங்கள் மற்றும் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வரி வதிப்புகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொதிப்படைந்த சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், ‘அமெரிக்க தரப்பின் முறையற்ற நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். சர்வதேச உறவில் அடிப்படை நடைமுறைகளை அமெரிக்கா மீறியுள்ளது. இதனால் இரு நாட்டு உறவும் இரு ராணுவங்களுக்கும் இடையிலான உறவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, தான் செய்துள்ள தவறை உடனடியாக மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்துள்ளது.

Advertisement

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.

Advertisement