தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது பொறுப்பேற்றுள்ளது.
ஹைலைட்ஸ்
- வெள்ளை மாளிகை, காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டது
- தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை தனது எதிர்ப்பை உடனடியாக தெரிவித்துள்ளது
- புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் 40 இந்திய மத்திய துணை ராணுவப்படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு வெள்ளை மாளிகை தனது எதிர்ப்பை உடனடியாக தெரிவித்துள்ளது. இதில் வெள்ளைமாளிகை பாகிஸ்தானிடன், "இந்த அமைப்புகளுக்கு வழங்கும் ஆதரவை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது பொறுப்பேற்றுள்ளது.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சரா சாண்டர்ஸ் அளித்துள்ள பேட்டியில், "பாகிஸ்தான் உடனடியாக தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்குகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இனி அந்த பகுதியில் வன்முறை, தீவிரவாதம் தலையெடுக்கக்கூடாது" என்று எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதலில் அமெரிக்க, இந்தியாவுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் முழு ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது.