This Article is From Nov 14, 2018

காரைக்கால் உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கஜா புயலின் எதிரொலியாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisement
தெற்கு Posted by

கஜா புயலை நாளை பிற்பகலை கரையை கடக்கிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா புயல் கரையை கடக்கும்போது கடலூர், நாகை, திருவாருர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்க னமழை பெய்யும் என்றும் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

இதனால் புயல் கரையைக் கடக்கும வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கஜா புயல் புயலாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ கரையை கடந்தாலும் கூட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்கள் புயலை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை மற்றும் காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement