This Article is From Dec 31, 2018

2018-ல் கவனம் ஈர்த்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்..!

2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் கொடுத்த முக்கிய தீர்ப்புகளை தொகுத்து தருகிறது NDTV தமிழ்

2018-ல் கவனம் ஈர்த்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்..!

இந்த ஆண்டின் பெண்களுக்கும் பாலின சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதிரடி தீர்ப்புகளை வழங்கி இந்த ஆண்டின் அரசியல் வரலாற்றின் கதாநாயகனாக திகழ்கிறது உச்ச நீதிமன்றம். இது தவிர 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் கொடுத்த முக்கிய தீர்ப்புகளை தொகுத்து தருகிறது NDTV தமிழ்.

 

சபரிமலைத் தீர்ப்பு

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த அமர்வில் இருந்த ஒரு பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும்தான் மதம் சார் நம்பிக்கைகளில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது என்றுதன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார். ஆனால் கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் இப்போது வரை ஒரு பெண்ணைக் கூட கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

 

gt8lnf4

 

தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல

 

தன்பாலின ஈர்ப்பு குற்றம் என்று இருந்த சட்டப்பிரிவு 377 ஒருபகுதியை நீக்கி வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கி தன்பாலின ஈர்ப்பை ஆதரிக்கும் முன்னோடி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு தனிமனிதர்களின் உரிமையையும் சுயமரியாதைக்குமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

 

51rmf44

 

திருமணத்தை மீறிய உறவு குற்றமல்ல

 

திருமணமான பெண்ணுடன் மற்றொரு ஆண் உறவு வைத்துக் கொண்டால் அதில் ஆண்களை மட்டும் தண்டிக்கும் வகையிலான இந்திய தண்டனைச் சட்டத்தின் 497 வது பிரிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். திருமண உறவின் புனிதத்தை காக்க வேண்டிய கடமை ஆண் பெண் இருவருக்குமானது. திருமணத்தை மீறிய உறவை விவகாரத்திற்கான காரணமாக பயன்படுத்தலாம். வயது வந்த இரு நபர்களிடையே ஏற்படும் பாலியல் உறவை எப்படி தண்டனைக் குற்றமாக கருத முடியும் என நீதிபதி இந்து மல்கோத்ரா கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

m33ao6tg

 

ஸ்டெர்லைட் தீர்ப்பு

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடைசெய்யக்கோரி நடந்த போராட்டத்தின் 100 வதுநாளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் தமிழக அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை இயக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்த அனுமதியை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

t7scvmb8

 

காவிரி தீர்ப்பு

 

தமிழகத்தின் தீராப் பிரச்னை என்றால் அது காவிரிதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர்களை அறிவித்து முறையாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேனையும் நியமித்தது.

 

tcmf0pfo

 

முத்தலாக் தீர்ப்பு

 

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் நடைமுறையை முத்தலாக் நடை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில் 5 நீதிபதிகளும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐவரில் பெரும்பான்மையான மூவர் கூறிய கருத்தின் அடிப்படையில் முத்தலாக் விவகாரத்து முறையை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

msr4875o

 

எஸ்.சி மற்றும் எஸ்.டி அரசு பதவி உயர்வு இட ஒதுக்கீடு தீர்ப்பு

 

அரசு பதவிகளில் பதவி உயர்வு அளிக்கப்படும் போது தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு முறையை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. மேலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் என்றும், அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும் மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும் என்று தீர்ப்பினை வழங்கியது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல்கள் செய்தனர். மேலும் இந்த வழக்கினை 7 பேர் கொண்ட சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பினை வழங்கியது. கடந்த வழக்கின் போது உச்ச நீதிமன்றம் கேட்ட தரவுகளை மாநில அரசுகள் தர மறுத்துவிட்டது.

இந்நிலையில் அதில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதற்காக கேட்கப்பட்ட தரவுகளை இனி தயாரிக்க வேண்டாம் என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில மத்திய அரசுகள் முழுமையான சுதந்திரத்துடன் செயல்படலாம். மேலும் இந்த வழக்கினை சாசன அமர்விற்கு மாற்ற முடியாது என்று கூறி தீர்ப்பினை வழங்கினார்கள்.

 

q4hleh2o
.