New Delhi: இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்ஸாஃப் கட்சி சென்ற மாதம் நடந்த பாகிஸ்தான் தேசிய சபைக்கான தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இன்று அந்நாட்டின் பிரதமராக அவர் பதவியேற்றுள்ளார்.
இம்ரான் கானின் பிடிஐ, தனிப் பெரும் கட்சியாக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அவர் பதவியேற்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்க தேவைப்பபட்ட 172 வாக்குகளை விட கூடுதலாக 4 வாக்குகள் கிடைத்தன. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, இம்ரான் கானின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். காங்கிரஸின் பஞ்சாப் அரசில் அவர் ஒரு அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்து, ‘நான் ஒரு அரசியல்வாதியாக இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஒரு நண்பனாக வந்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சியின் லைவ் அப்டேட்ஸ்:
11:09 AM- பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் போது, தடுமாறிய இம்ரான் கான்.
11:04 AM- இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் தேசிய சபை சபாநாயகர் அசாத் கைசிர், ராணுவத் தளபதி கோமர் ஜாவெத் பாஜ்வா, விமானப்படை தலைவர் மௌஜித் அன்வர் கான், கடற்படை தலைவர் அட்மிரல் ஜாஃபர் முகமது அப்பாஸி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரமீஸ் ராஜா மற்றும் வசீம் அக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
10:52 AM- பாகிஸ்தான் 22 வது பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்.
10:47 AM- நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் ராணுவத் தளபதி கோமர் ஜாவெத் பாஜ்வாவை சந்தித்து போது.
10:37 AM- இம்ரான் கானின் மனைவி புஷ்ரா மேனகா, பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார்.
10:20 AM- நவ்ஜோத் சிங் சித்து, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்தடைந்தார்.
10:09 AM- இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சி ஆரம்பமானது.