Read in English
This Article is From Jul 27, 2018

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி; கூட்டணி வைத்தால் பிரதமர் ஆகலாம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரிக் - இ- இன்சாஃப் கட்சி தனிப் பெரும் கட்சியாக வந்துள்ளதாக தகவல்

Advertisement
உலகம் (with inputs from Agencies)
New Delhi:

பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முடிவுகளில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரிக் - இ- இன்சாஃப் கட்சி தனிப் பெரும் கட்சியாக வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும், கூட்டணி அமைத்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் மொத்தம் 272 சீட்டுகள் இருக்கின்றன. இதற்கான வாக்கெடுப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலைய நிலவரப்படி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்ரான் கானின் டெஹ்ரிக் - இ- இன்சாஃப் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிறையில் இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் பிஎம்எல்-என் கட்சி, 63 இடங்களில் வெற்றியடைந்துள்ளது. பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவால் பூட்டோ தலைமை வகிக்கும் பிபிபி கட்சி, 42 இடங்களில் வெற்றி பெற்றது. இதுவரை 252 இடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதம் இருக்கும் இடங்களுக்குப் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

தனிப் பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவைப்படும். இம்ரான் கானின் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிகிறது. இருந்தும் சிலருடன் கூட்டணி வைப்பதன் மூலம் அவர் ஆட்சி அரியணையில் ஏற முடியும் என்று கூறப்படுகிறது.
 

Advertisement