Read in English
This Article is From Jun 08, 2019

காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச தயார்! - மோடிக்கு இம்ரான்கான் கடிதம்!

அடுத்த வாரம் பிஸ்கெக்கில் நடைபெற உள்ள மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் இடையே சந்திப்பிற்கு ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • பாகிஸ்தான் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசத் தயார் இம்ரான்கான் கடிதம்.
  • இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
  • தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு இம்ரான்கான வாழ்த்து தெரிவித்தார்.
New Delhi:

காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச தயாராக உள்ளதாக பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, இம்ரான்கான் இடையே தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

மேலும், அதில், 2-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த கடிதம் குறித்து, இந்தியா இன்னும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

Advertisement

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், மீண்டும் பாகிஸ்தான் பிரதமர் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தான் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையை இந்தியா தொர்ந்து மறுத்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, எல்லை பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

Advertisement

முன்னதாக, கடந்த பிப்.14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது.

அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த இந்தியா, கடந்த 2017ம் உறுப்பினராக இணைந்தது. இதையடுத்து இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெஸ்கிதான், பாகிஸ்தானை ஆகிய எட்டு நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் இந்தியா, இம்மாநாட்டில் கலந்து கொள்வது இது 3வது முறையாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு ஜூன் 13-14 தேதிகளில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தமாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் போது, இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement