This Article is From Jun 14, 2020

சென்னையில் 10 மண்டலங்களில் ஆயிரத்தினை கடந்த கொரோனா! மணடலவாரியாக முழு விவரம்!!

ஜூன் 14 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 30,444 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 10 மண்டலங்களில் ஆயிரத்தினை கடந்த கொரோனா! மணடலவாரியாக முழு விவரம்!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 687 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்கள், குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 18,878 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 17,911 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் 1,183 பேர், பெண்கள் 806 பேர் ஆவார்கள்.  ஒட்டுமொத்த பாதிப்பில் ஆண்கள் 26,350 பேர், பெண்கள் 16,320 பேர், திருநங்கைகள் 17 பேர் ஆவார்கள். கொரோனா பரிசோதனை மையங்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் தற்போது 45 அரசு மற்றும் 34 தனியார் என மொத்தம் 79 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (13.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,113

மணலி - 434

மாதவரம் - 814

தண்டையார்பேட்டை - 3,928

ராயபுரம் – 5,056

திரு.வி.க நகர் - 2,772

அம்பத்தூர் – 1,058

அண்ணா நகர் - 2,960

தேனாம்பேட்டை - 3,652

கோடம்பாக்கம் - 3,108

வளசரவாக்கம் - 1,338

ஆலந்தூர் - 593

 அடையாறு - 1,725

பெருங்குடி - 551

சோழிங்கநல்லூர் - 560

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 623

ஜூன் 14 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 30,444 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

.