This Article is From Jan 13, 2019

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 நாட்களில் 28 தமிழக மீனவர்கள் கைது

கைதான மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

இலங்கை அருகே கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நெடுந்தீவுப் பக்கம் எல்லை தாண்டி வந்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களிடம் இருந்த 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் பின்னர், ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் மேலும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி அவர்கள் மீன் பிடித்ததாகவும், போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் இலங்கை கடற்படையால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisement

கைதான மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement