This Article is From Jun 09, 2019

முட்டையை சுத்தியலால் உடைக்கும் சியாச்சின் எல்லை படை வீரர்கள் : வைரல் வீடியோ

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ராணுவ வீரர்கள் வாழ்க்கையைப் பார்த்து பெரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முட்டையை சுத்தியலால் உடைக்கும் சியாச்சின் எல்லை படை வீரர்கள் : வைரல் வீடியோ

ட்விட்டரில் அதிகளவு பகிரப்படும் வீடியோ

ஹைலைட்ஸ்

  • நிலத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் உள்ளது சியாச்சின்
  • இங்கு உணவுகள் அனைத்தும் உறைந்து விடுகிறது.
  • ஜூஸினை செங்கல் கட்டி போல் எடுத்து வைக்கின்றனர்
New Delhi:

கடுங்குளிரில் எல்லையில் படைவீரர்கள் அன்றாட உணவிற்காக எப்படி சிரமப்படுகிறார்கள் என்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நிலத்திலிருந்து 20,000 அடி  உயரத்தில் இருக்கும் சியாச்சின் தெற்கு மலைத்தொடர் பகுதியில் நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கு -60 டிகிரி அளவுக்கு குளிர் நிலவுகிறது. அவர்களுக்காக வழங்கப்பட்ட ஜூஸ், முட்டை, தக்காளி, காய்கறிகள்  -60 டிகிரி பனியில் உறைந்து கல்போல் ஆகிவிட்டது.

வீடியோவில் கொடுத்த ஜூஸ் பாக்கெட்டை கத்திரியால் வெட்டி ஜூஸினை கட்டியாக வெளியே எடுத்து சுத்தியலால் உடைக்கிறார். முட்டை, தக்காளி கூட கல் போல் உறைந்து தூக்கி போட்டால் எம்பி விழுகிறது. தங்களின் அன்றாட வாழ்வு கூட எத்தனை சவாலானது என்பதை  ராணுவ வீரர்கள் இதில் தெரிவித்தனர்.

இது போன்ற மிக உயரமான பனிமலைப் பகுதிகளில் எதிரிகளை விடவும், உணவும் உறங்குமிடமும் தான் நமது பாதுகாப்பு படை வீரர்களுக்கு மிகப்பெரிய சவலாக இருப்பதை உணர்த்துகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ராணுவ வீரர்கள் வாழ்க்கையைப் பார்த்து பெரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். “சியாச்சினில் வாழ்க்கை கற்பனை செய்து பார்ப்பதை விட மிகவும் சவாலானது.” என்று ட்விட்டர்வாசி ஒருவரு கமெண்ட் செய்துள்ளார்.

.