Read in English
This Article is From Oct 14, 2019

இந்தியாவிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கிகள்

முதல் முறையாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை தொடர்பான உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பின் அடிப்படையில் இவற்றை தயாரித்துளது.

Advertisement
இந்தியா Edited by

எஸ்.எஸ்.எஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.

Bengaluru:

இந்தியாவை பாதுகாப்பு கருவிகளின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான மத்திய அரசின் முயற்சி  வெற்றியடைந்துள்ளது. கர்நாடகவின் பெங்களூருவை தலைமையகமாக கொண்ட ஒரு நிறுவனம், ஆயுதப்படைகளின் பயன்பாட்டிற்காக துப்பாக்கியினை உள்நாட்டில் முதல் முதலாக தயாரித்துள்ளது. 

கடந்த 61 ஆண்டுகளாக வாகன உதிரி பாகங்களை தயாரித்து வந்த இந்த நிறுவனம் முதல் முறையாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை தொடர்பான உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பின் அடிப்படையில் இவற்றை தயாரித்துளது. 

இது குறித்து எஸ்.எஸ்.எஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ் ஆர்.மசனி கூறுகையில், பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதில் இருந்து பாதுகாப்புதுறைக்கு அனைத்து ஆயுதங்களின் உதிரி பாகங்களையும் தயாரித்து விநியோகித்து வருகிறோம். ஏனெனில் ஆயுதங்களை உற்பத்தி செய்ய முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்ட சில நிறுவனங்களில் எங்களுடையதும் ஒன்றாகும். முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை நமது பாதுகாப்புதுறைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எங்களின் தொழில்நுட்ப ஆய்வுக் குழு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது என்றார்.

Advertisement

முதன்மை செயல் அதிகாரி விவேக் கிருஷ்ணன் கூறுகையில், 7.62x51 மிமீ .338 லாபுவா மேக்னம் வகை துப்பாக்கிகளை நாங்கள் தயாரித்துள்ளோம். ஒவ்வொரு பாரலின் அளவும் 20 முதல் 24 இன்ச் வரை இருக்கும். இது முழுக்க முழுக்க அடிப்படை விதிகளின் படை தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

நிறுவனம் தனது உற்பத்தி பிரிவுக்காக ஜிகானியில் 80,000 சதுர அடி ஆயுத தொழிற்சாலையை நிர்மாணித்து வருகிறது.

Advertisement
Advertisement